உலகம்

அமெரிக்காவில் கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி

DIN

அமெரிக்காவின் கொலராடோவில் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கான இரவு கேளிக்கை விடுதியில் சனிக்கிழமை இரவு துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் நடந்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர், 25 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே ஆண்டில் நடந்த ஆறாவது படுகொலை இது.

இந்த துப்பாக்கிச் சூடு வெறுப்பால் நடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். கேளிக்கை விடுதியில் இருந்து இரண்டு நீண்ட துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தன்பாலின சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆண்டர்சன் லீ அல்ட்ரிச் (22)  என அடையாளம் கண்டுள்ள போலீசார், அவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூடு 2016 பல்ஸ் கிளப் படுகொலையை நினைவூட்டுகிறது, புளோரிடாவின் ஆர்லாண்டோவில் உள்ள தன்பாலின சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் 49 பேரைக் கொன்றார், பின்னர் அவர் காவல்துறையினரால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

SCROLL FOR NEXT