உலகம்

இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி 252 ஆக உயர்வு! 370-க்கும் மேற்பட்டோர் காயம்

இந்தோனேசியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளது. 

DIN

இந்தோனேசியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தோனேசியா நாட்டின் மேற்கு சாவகம் (ஜாவா) மாகாணம், சியாஞ்சூா் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவானது.

பூமிக்கு 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் அந்தப் பகுதியிலுள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்தன.  

நிலநடுக்கத்துக்கு 162 போ் பலியாகியுள்ளதாக மேற்கு சாவக ஆளுநா் ரித்வன் கமீல் நேற்று கூறியிருந்தார். மேலும் சியாஞ்சூா் பகுதியில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகள் இடையே சிக்கியுள்ள பலரை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் பலி எணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இந்தோனேசியாவில் நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும், காணாமல் போன 32 பேரைத் தேடி வருவதாகவும் இதில் 377 பேர் காயமடைந்துள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாழ்க்கை இப்போது... மீரா ஜாஸ்மின்!

ஒரு பார்வையில்... உதய்பூரில்... நம்ரதா சோனி!

மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய்... நிதி அகர்வால்!

தோற்றங்கள் பலவிதம்... கிருத்தி சனோன்!

சுவாசங்களுக்கு இடையிலான அமைதி பெருங்கதை... ஆராதனா சர்மா!

SCROLL FOR NEXT