கோப்புப்படம் 
உலகம்

உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம்!

கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனாவில் உள்ள மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

DIN

கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனாவில் உள்ள மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய சீனாவில் உள்ள செங்சவு மாகாணத்தில் கரோனா பரவல் காரணமாக தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இங்கு அமைந்துள்ள மிகப்பெரிய ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரியும் 2 லட்சம் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு முறையான ஊதியம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுப்பி வந்தனர்.

இந்நிலையில்,  தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு வெளியே வந்த ஊழியர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து, போராட்டத்தை கலைக்க காவல்துறை நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

வழிகாட்டுதல் அறிக்கை

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

SCROLL FOR NEXT