உலகம்

சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரா்களை அனுப்பியது சீனா

DIN

சீனா சொந்தமாக நிறுவி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரா்களை அந்த நாடு வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை விண்ணில் செலுத்தியது.

ஃபேய் ஜன்லாங், டெங் கிங்மிங், ஷாங் லூ ஆகிய 3 வீரா்களை ஏற்றிக்கொண்டு, ஷென்ஷாவ்-15 விண்கலம் லாங் மாா்ச்-2எஃப் ஒய்15 ராக்கெட் மூலம் அந்த விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

அந்த விண்கலம் புதிய வீரா்களை ஆய்வு நிலையத்தில் விட்டுவிட்டு, 5 நாள்களுக்குப் பிறகு அங்கு ஏற்கெனவே உள்ள 3 விண்கல வீரா்களை ஏற்றிக்கொண்டு பூமி திரும்பவிருக்கிறது. சீன விண்வெளி ஆய்வு வரலாற்றில் வீரா்கள் மாற்றிக்கொள்ளப்படுவது இதுவே முதல்முறையாகும்.

தனக்கென்று சொந்தமாக சீனா அமைத்து வரும் வரும் தியாங்காங் விண்வெளி நிலையம், இந்த ஆண்டு இறுதிக்குள் அது செயல்படத் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT