உலகம்

ஆஸி. துணைப் பிரதமருக்கு கோலியின் பேட்டை பரிசாக வழங்கிய வெளியுறவுத் துறை அமைச்சர்! 

ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பேட்டை பரிசளித்துள்ளார். 

DIN

ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பேட்டை பரிசளித்துள்ளார். 

ஆஸ்திரேலியா கான்பெராவில் உள்ள போர் நினைவுச் சின்னத்தை பார்வையிட வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சென்றிருந்தார். அங்கு ஆஸி. துணைப்பிரதமரும் ராணுவ அமைச்சருமான ரிச்சர்ட் மார்லெஸ் அவர்களை சந்தித்துப் பேசினார். இருவரும் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு பற்றிய கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். நமது வளர்ந்து வரும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பின் மூலம் அமைதியான, வளமான மற்றும் விதிகள் அடிப்படையிலான இந்தோ-பசிபிக் பகுதியை உறுதி செய்கிறதென அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். பின்னர் விராட் கோலியின் பேட்டை பரிசளித்தார். 

இது குறித்து ஆஸி. துணைப்பிரதமரும் ராணுவ அமைச்சருமான ரிச்சர்ட் மார்லெஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

ஜெய்சங்கர் அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்களை பலவிதமான விஷயங்கள் இணைத்துள்ளது; இதில் கிரிக்கெட்டும் ஒன்று. விராட் கோலியின் கையெழுத்து போடப்பட்ட கிரிகெட் பேட்டை எனக்கு பரிசளித்து ஆச்சர்யப்படுத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT