முகப்பு
உலகம்

பயங்கரவாத பட்டியலில் மெட்டா நிறுவனம்! ரஷியாவில் வாட்ஸ்ஆப் தடை

மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத பட்டியலில் இணைத்து ரஷியாவின் நிதி கண்காணிப்பு முகமை அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:32 AM
பகிர்:

மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத பட்டியலில் இணைத்து ரஷியாவின் நிதி கண்காணிப்பு முகமை அறிவித்துள்ளது. இதன்மூலம், மெட்டாவின் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

ரஷிய அரசுக்கு ஆதரவளிக்கும் செய்திகளை பயனர்கள் பார்ப்பதை முகநூல் கட்டுப்படுத்தியதாகவும், ரஷியப் படைகளை எதிர்த்து வன்முறைக்கு அழைப்பு விடுத்தவர்களின் பதிவுகளை முகநூல் உள்ளிட்ட மெட்டா நிறுவனத்தின் செயலிகளில் அனுமதித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் ரஷியாவில் தீவிரவாத நடவடிக்கைகளில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி மெட்டாவின் முகநூலுக்கு அந்நாடு தடை விதித்தது.

மெட்டா நிறுவனம் சார்பாக தடையை எதிர்த்து மாஸ்கோ நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் முகநூலுக்கான தடையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்து ரஷிய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

மெட்டா நிறுவனம் பயங்கரவாத அமைப்புகளில் சேர்க்கப்பட்டதால், அந்நிறுவனத்தின் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிரபல சமூக வலைதளங்களுக்கும் தடை விதிக்கப்படவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →