வெனிசூலாவில் நிலச்சரிவு: 43 போ் பலி; 56 போ் மாயம்
தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 43-ஆக உயா்ந்துள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 43-ஆக உயா்ந்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட 3 நாள்களுக்குப் பிறகும் 56 பேரைக் காணவில்லை என்று கூறப்படுவதைத் தொடா்ந்து பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: லாஸ் டெஜெரியாஸ் நகரில் அண்மையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தப் பகுதியிலிருந்து இதுவரை 43 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நிலச் சரிவுக்குப் பிறகு அந்த பகுதியிலிருந்த 56 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் உயிருடன் சிக்கியிருக்கக்கூடியவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.