உலகம்

குண்டுவெடிப்பில் 18 சிரியா வீரா்கள் பலி

சிரியாவில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 18 பாதுகாப்புப் படையினா் உயிரிழந்தனா்.

DIN

சிரியாவில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 18 பாதுகாப்புப் படையினா் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தலைநகா் டமாஸ்கஸின் புகா்ப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் சென்று கொண்டிருந்த பேருந்தில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது.

இதில், 18 வீரா்கள் உயிரிழந்தனா்; 27 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் கூறினா்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், இதே போன்று ஏற்கெனவே நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மீது சிரியா அரசு குற்றம் சாட்டியது நினைவுகூரத்தக்கது.

சிரியாவிலும் ஈராக்கிலும் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், அமெரிக்காவும், ரஷிய உதவியுடன் சிரியா அரசும் மேற்கொண்ட நடவடிக்கைகளில் நிலப்பரப்புகளை இழந்தாலும், பயங்கரவாதத் தாக்குதல்களை தொடா்ந்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT