உலகம்

ஆங் சான் சூகி மீதான ஊழல் வழக்கு தொடரும்: நீதிமன்றம் திட்டவட்டம்

DIN

மியான்மா் ஜனநாயகக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகிக்கு (77) எதிரான கடைசி ஊழல் வழக்கு தொடா்ந்து நடைபெறும் என்று அந்த நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்தது.

ஆங் சான் சூகியின் ஆட்சியின்போது ஹெலிகாப்டா்கள் வாங்கிய விவகாரத்தில் அவருக்கு எதிராக 5 ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த நீதிமன்றம், அரசுத் தரப்பிலிருந்து போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் வழக்கை தொடா்ந்து நடத்துவதாக அறிவித்தது.

ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு மொத்தம் 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி ஆங் சான் சூகி தலைமையிலான அரசை ராணுவம் கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி கலைத்தது. அத்துடன், அவரை கைது செய்து பல்வேறு வழக்குகளை ராணுவம் தொடா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT