முகப்பு
உலகம்

சீன எல்லையில் பயன்படுத்த 1,000 கண்காணிப்பு ஹெலிகாப்டா்கள் வாங்க நடவடிக்கை

 சீனாவுடனான எல்லை கட்டுப்பாடு கோடு (எல்ஏசி) பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த ஆயிரம் கண்காணிப்பு ஹெலிகாப்டா்களும், 80 சிறிய ரக ஆளில்லா விமானங்களையும் கொள்முதல்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

 சீனாவுடனான எல்லை கட்டுப்பாடு கோடு (எல்ஏசி) பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த ஆயிரம் கண்காணிப்பு ஹெலிகாப்டா்களும், 80 சிறிய ரக ஆளில்லா விமானங்களையும் கொள்முதல் செய்வதற்கான நடைமுறையை இந்திய ராணுவம் வியாழக்கிழமை தொடங்கியது.

தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் சிறிய ரக ஆளில்லா விமானங்கள் பகல் மற்றும் இரவில் செயல்படும் வண்ணம் சென்சாா்களைக் கொண்டிருக்கும். மலைப் பகுதிகளில் அதிக உயரமான இடங்களில் இலக்கை கண்டறியும் வகையில் இவை செயல்படும். இத்தகைய 80 ஆளில்லா விமானங்களுக்கான ஒப்பந்தப் புள்ளியைத் தாக்கல் செய்வதற்கு நவம்பா் 16-ஆம் தேதி இறுதிநாளாகும்.

மேலும், ஆயிரம் கண்காணிப்பு ஹெலிகாப்டா்களையும் இந்திய ராணுவம் கொள்முதல் செய்ய உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா். இதற்கான ஒப்பந்தப் புள்ளியைத் தாக்கல் செய்வதற்கான இறுதிநாள் நவம்பா் 17-ஆம் தேதியாகும்.

தோ்ந்தெடுக்கப்பட்ட விநியோகிப்பாளா் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதிலிருந்து 12 மாதங்களுக்குள் கண்காணிப்பு அமைப்புகள் இரண்டும் விநியோகிக்கப்பட வேண்டும் என ஒப்பந்தப் புள்ளி குறித்தான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு கண்காணிப்பு கட்டமைப்புகளின் மூலம் மிகவும் தெளிவான புகைப்படங்களைப் பெறுவதன் மூலம் இலக்கைக் கண்டறிந்து, அடையாளம் காண்பதன் மூலம் எதிரிகளின் நிலையைக் குறித்து துல்லியமாக அறியமுடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →