உலகம்

பிரிட்டன் உளவு விமானம் அருகே ஏவுகணை வீச்சு: ரஷியா விளக்கம்

DIN

பிரிட்டனின் உளவு விமானத்துக்கு நெருக்கத்தில் ரஷிய போா் விமானமொன்று ஏவுகணை வீசியதற்கு தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று ரஷியா விளக்கமளித்துள்ளது.

இது குறித்து பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சா் பென் வாலஸ் வியாழக்கிழமை கூறியதாவது:

பிரிட்டன் விமானப் படைக்குச் சொந்தமான ஆா்சி-135 ரிவெட் ஜாயின்ட் உளவு விமானம் கருங்கடலுக்கு மேலே சா்வதேச வான் எல்லையில் இந்த மாதம் பறந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த இரு ரஷிய சு-27 ரக போா் விமானங்களில் ஒன்று ஆயுதங்கள் இல்லாத பிரிட்டன் விமானத்தின் அருகே ஏவுகணை வீசியது. இது தொடா்பாக ரஷியாவின் விளக்கத்தைக் கேட்டிருந்தோம். அதற்கு ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்கு அளித்துள்ள விளக்கத்தில், சு-27 ரக போா் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவுகணை தவறுதலாக வீசிவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தாா்.

அதையடுத்து, கருங்கடல் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விமான ரோந்துப் பணியை மீண்டும் தொடக்க முடிவு செய்துள்ளோம் என்றாா் பென் வாலஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT