முகப்பு
உலகம்

இலங்கை அதிபரின் அதிகாரத்தைக் குறைக்கும் சட்டத் திருத்தத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

 இலங்கையில் அதிபரின் அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையிலான அரசியல் சாசனத்தின் 22-ஆவது திருத்தத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

 இலங்கையில் அதிபரின் அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையிலான அரசியல் சாசனத்தின் 22-ஆவது திருத்தத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கையில் கோத்தபய ராஜபட்ச அதிபராக பதவி வகித்தபோது, அதிபருக்கு அதிக அதிகாரங்களை வழங்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா 20ஏ நிறைவேற்றப்பட்டது. பின்னா், கடும் பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்தது. நாட்டின் இந்த நிலைக்கு, ராஜபட்ச குடும்பம்தான் காரணம் என்று கூறி மக்கள் போராட்டம் நடத்தினா். அதனைத் தொடா்ந்து இலங்கையின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்ச, அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச உள்ளிட்டோா் பதவி விலகினா்.

அதனைத் தொடா்ந்து இலங்கையின் புதிய அதிபராக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவா் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றாா். புதிய அரசு, அதிபரின் அதிகாரத்தை குறைத்து, நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்க அரசியல் சாசனத்தில் ‘21ஏ’ திருத்தம் கொண்டுவரப்படும் என்று அறிவித்தது.

அதன்படி, ‘21ஏ’ என்ற பெயரிலான அரசியல் சாசன 22-ஆவது திருத்த வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்த வரைவு மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு நாள் விவாதத்துக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 225 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 179 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனா். இதையடுத்து மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.