வாரத்தின் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாக இருக்கும் என்று நினைப்பதாக கின்னஸ் உலக சாதனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வாரத்தின் மிக மோசமான நாள் திங்கள்கிழமை என்று இந்நிறுவனம் கூறியிருந்தது.
வாரத்தின் 7 நாள்களில் ஒவ்வொரு நாளும் மக்களின் மனநிலை வெவ்வேறாக இருக்கும். உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் விடுமுறை என்பதால் கொண்டாட்டம்தான். திங்கள்கிழமை வாரத்தின் முதல் அலுவலக நாள் வேலை நாள் என்பதால் பலருக்கும் சலிப்பாகத்தானிருக்கும்.
இந்நிலையில்தான் கின்னஸ் உலக சாதனை நிறுவனம், வாரத்தின் மிக மோசமான நாள் 'திங்கள்கிழமை' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தது.
நெட்டிசன்கள் பலரும் இதனைப் பாராட்டி, பகிர்ந்து தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். கின்னஸ் நிறுவனத்தின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து கின்னஸ் நிறுவனம் இன்று, வாரத்தின் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாக இருக்கும் என்று நினைப்பதாக பதிவிட்டுள்ளது. இதற்கும் நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
இன்னைக்கு ட்ரெண்டிங் இதுதான்!
இதையும் படிக்க | தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ. 50 கோடிக்கு விற்பனை! முன்னாள் ஆளுநர் அதிர்ச்சித் தகவல்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.