உலகம்

மூட்டை மூட்டையாக பணத்தை சாலையில் கொட்டிய கொள்ளையர்கள்

சூதாட்டக் கிளப்புகளில் பணத்தைக் கொள்ளையடிக்கும் கும்பலைப் பற்றிய காட்சிகள் ஏராளமான படத்தில் வந்திருக்கும். ஆனால் சிலியில் நடந்த கொள்ளைக் சம்பவம் ஒன்று பரபரப்புச் செய்தியாக மாறியது.

DIN

சூதாட்டக் கிளப்புகளில் பணத்தைக் கொள்ளையடிக்கும் கும்பலைப் பற்றிய காட்சிகள் ஏராளமான படத்தில் வந்திருக்கும். ஆனால் சிலியில் நடந்த கொள்ளைக் சம்பவம் ஒன்று பரபரப்புச் செய்தியாக மாறியது.

சிலி நாட்டின் சான்டியாகோ பகுதியில் ஒரு சூதாட்டக் கிளப்புக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்து பணத்தை மூட்டைகளில் கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்து காரை பின்தொடர்ந்து வந்த காவலர்களிடம் இருந்து தப்பிக்க வேறு வழி தெரியாத கொள்ளையர்கள், ஒரே இடத்தில் ஏராளமான கார்கள் வந்து கொண்டிருந்த போது, காரிலிருந்து பண மூட்டை சாலையில் வீசினர்.

பணமூட்டை சாலையில் விழுந்த அடுத்த நொடி காற்றில் ரூபாய் நோட்டுகள் பறக்கத் தொடங்கின. அருகே காரில் வந்து கொண்டிருந்தவர்கள் இதனைப் பார்த்ததும் ஒரு நொடியும் தாமதிக்காமல் கார்களை அப்படியே நிறுத்திவிட்டு பணத்தை எடுக்க வந்துவிட்டனர். 

நல்லவேளையாக, அதே வழியில் வந்து கொண்டிருந்த மற்ற கார் ஓட்டுநர்கள் கண் தெரிந்தவர்களாக இருந்தனர். தூரத்தில் கார்கள் நிற்பதையும் சிலர் சாலையில் எதையோ எடுப்பதையும் பார்த்துவிட்டு தொலைவிலேய கார்களை நிறுத்திவிட்டு என்ன நடக்கிறது என்பதை உற்று கவனித்தனர். இல்லையென்றால் வேகமாக வந்த கார்களால் சாலையில் பெரும் அசம்பாவிதம் கூட நேரிட்டிருக்கலாம்.

ஆனால் அதற்குள் அங்கு வந்த காவல்துறையினர், கொள்ளையர்களைக் கைது செய்ததோடு, காற்றில் பறந்த பணத்தையும் பறிமுதல் செய்துவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT