கோப்புப்படம் 
உலகம்

ரிஷி சுனக் பதவியேற்பது எப்போது? புதிய தகவல்!

பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக், அவர் அந்த நாட்டின் பிரதமராக இன்று மாலை பதவி ஏற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக், அவர் அந்த நாட்டின் பிரதமராக இன்று மாலை பதவி ஏற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று, ரிஷி சுனாக் மன்னர் சார்லஸை சந்திக்கிறார். மன்னர் 3 ஆம் சார்லஸ், முறைப்படி பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக்கை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மன்னர் 3ம் சார்லஸின் ஒப்புதலை அடுத்து பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அந்த நாட்டின் பிரதமராகத் தேர்வாகி இருக்கிறார்.

கன்சர்வேடிவ் தலைவர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பென்னி மார்டன்ட் விலகியதைத் தொடர்ந்து, ரிஷி சுனக் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக பிரிட்டன் பிரதமராகும் வரலாற்றை ரிஷி சுனக் படைத்துள்ளார்.

கரோனா நெருக்கடிக்கு மத்தியில் நிதித் துறையைத் திறமையாகக் கையாண்டதால், போரிஸ் ஜான்சனுக்குப் பிறகு அடுத்த பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார் ரிஷி சுனக் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக்.5-ல் நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: விழா ஏற்பாட்டாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு!

உறவுகள் நீயே... பவித்ரா ஜனனி!

அழகிய கண்ணே... ஐஸ்வர்யா மேனன்!

இதயத்தை எடுத்து விட்டாய்... அனன்யா!

SCROLL FOR NEXT