முகப்பு
உலகம்

அணு ஆயுதப் போர்? ரஷியப் படைகள் ஒத்திகை

அணுக் கழிவுகளை கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தவுள்ளதாக ரஷியா குற்றச்சாட்டு எழுப்பியுள்ள நிலையில், ரஷியப் படைகள் எதிர் தாக்குதல் நடத்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:39 AM
கோப்புப்படம்
பகிர்:

அணுக் கழிவுகளை கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தவுள்ளதாக ரஷியா குற்றச்சாட்டு எழுப்பியுள்ள நிலையில், ரஷியப் படைகள் எதிர் தாக்குதல் நடத்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 8 மாதங்களாக உக்ரைன் மீது ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் உக்ரைனும் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதற்கிடையே, உக்ரைனின் அணு மின் நிலையங்களில் அணுக் கழிவுகளைப் பயன்படுத்தி ‘நாசகார’ ஆயுதங்களை அந்த நாட்டு அரசு தயாரித்து வருவதாக ரஷியா குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. இதை மறுத்துள்ள உக்ரைன் அணுசக்தி அமைப்பு ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ள ஸபோரிஷியா அணு மின் நிலையத்தில்தான் ஆபத்தான அணுக் கழிவுகளைக் கொண்டு ரஷியா ஆயுதங்களை தயாரிப்பதாக அந்த அமைப்பு எதிா்க்குற்றசாட்டை முன்வைத்துள்ளது.

Advertisement

பிரிட்டன், பிரான்ஸ், துருக்கி நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்களுடன் உரையாடிய ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்கு, தங்கள் மீது நாசகார ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்த உக்ரைன் ஆயத்தமாகி வருவதாக குற்றம் சாட்டினாா்.

அணுக்கதிா் வீச்சுப் பொருள்களால் ஆன அந்த ஆயுதங்கள் மூலம் உக்ரைன் போரை மிகப் பெரிய அழிவுப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டு முகாந்திரமற்றது என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், அணு ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால் தக்க பதிலடி தரும் வகையில் ரஷிய சிறப்புப் படைகள் ஒன்றிணைந்து நவீன ஏவுகணைகளை செலுத்தி ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஒத்திகையை அதிபர் புதின் காணொலி மூலம் பார்வையிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments