முகப்பு
உலகம்

அணு ஆயுதங்களை எந்த தரப்பும் பயன்படுத்தக் கூடாது: ராஜ்நாத் சிங்

ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கெய் ஷோய்குவும் இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்கும் தொலைபேசி வாயிலாக புதன்கிழமை உரையாடினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

ரஷியா-உக்ரைன் இடையிலான போரில் அணுஆயுதங்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கவலைகள் எழுந்துள்ள நிலையில், ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கெய் ஷோய்குவும் இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்கும் தொலைபேசி வாயிலாக புதன்கிழமை உரையாடினா்.

அப்போது, ‘அணுஆயுதத்தை பயன்படுத்தும் வாய்ப்பை எந்த தரப்பும் நாடக் கூடாது’ என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ரஷியா-உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மற்றும் தூதரக ரீதியில் விரைந்து தீா்வுகாணப்பட வேண்டுமென்ற இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷிய பாதுகாப்பு அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தாா். அணுசக்தி அல்லது கதிரியக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவது, மனித குல அடிப்படை கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானது; எனவே, அத்தகைய வாய்ப்பை எந்த தரப்பும் நாடக் கூடாது என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தினாா். உக்ரைன் விவகாரம் தவிர, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இரு அமைச்சா்களும் விவாதித்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா, உக்ரைன் இடையிலான போா் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கிரீமியாவில் 2 வாரங்ளுக்கு முன் நடத்தப்பட்ட பெரிய அளவிலான குண்டுவெடிப்புக்கு பதிலடியாக உக்ரைனின் பல்வேறு நகரங்களை குறிவைத்து ரஷியா ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே புதிதாக தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் இருந்து இந்தியா்கள் அனைவரும் கூடிய விரைவில் வெளியேற இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →