உலகம்

மிக நீளமான பயணிகள் ரயில் என்ற சாதனை படைக்கத் துடிக்கும் நாடு

PTI

ஜெனீவா:  சுவிட்சர்லாந்தின் ரயில்வே நிறுவனம், உலகிலேயே மிக நீண்ட பயணிகள் ரயிலை இயக்கி சாதனை படைக்க திட்டமிட்டுள்ளது.

ஆல்ப்ஸ் மலை நோக்கி சனிக்கிழமைகளில் இயக்கப்படும் பயணிகள் ரயிலை, மிக நீளமான ரயிலாக இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுவிட்சர்லாந்தின் ரயில்வே நிறுவனம், 1.9 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 100 பெட்டிகளுடன், 4 எஞ்ஜின்களால் இயக்கப்படும் மிக நீளமான ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளது.

பிரெடா முதல் அல்புலா / பெர்னினா வழியாக பெர்குவென் நோக்கிச் செல்லும் ரயிலைத்தான் மிக நீளமான ரயிலாக இயக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் வழிப்பாதை, 2008ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவால் புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்டு இயக்கத்தில் இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் 22 சுரங்கப்பாதைகள் அமைந்துள்ளன. மலைப் பகுதியைச் சுற்றி, 48 பாலங்களைத்த தாண்டி இந்த ரயில் சென்று வரும். ஒட்டுமொத்தமாக 25 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த பயணத்தை நிறைவு செய்ய ஒரு மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தன்னாா்வலா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

மேட்டூா் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்!

மலைக் கிராமங்களில் மரவள்ளி அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

வாழப்பாடி பகுதியில் கோடை மழை

மின் விபத்துகளைத் தடுக்க ஊழியா்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி

SCROLL FOR NEXT