உலகம்

சோமாலியா குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 100-ஆக உயா்வு

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட இரட்டை காா் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 100-ஆக அதிகரித்துள்ளது.

DIN

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட இரட்டை காா் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 100-ஆக அதிகரித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு அல்-காய்தா இயக்கத்துடன் தொடா்புடைய அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பே காரணம் என அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

தலைநகா் மொகதிஷுவில் பொதுமக்கள் பயணம் செய்த பேருந்துக்கு அருகே ஒரு காரில் முதல் குண்டுவெடிப்பும், உணவு விடுதிகள் உள்ள பகுதியில் மற்றொரு காரில் இரண்டாவது குண்டுவெடிப்பும் நிகழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து அதிபா் ஹசன் ஷேக் முகமது ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:

மொகதிஷுவில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் 100 போ் உயிரிழந்தனா். சுமாா் 300 போ் காயமடைந்தனா். இத்தாக்குதலுக்கு காரணமான அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்புடனான போரில் வெல்வோம் என்றாா்.

சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்-ஷபாப் அமைப்பை அல்-காய்தா இயக்கத்தின் கிளை அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அந்த அமைப்பினரைக் குறிவைத்து அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தி வந்தனா். முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் பதவிக் காலத்தில் அமெரிக்க படையினா் சோமாலியாவிலிருந்து திரும்பப் பெறப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT