உலகம்

லாட்டரியில் ரூ. 248 கோடி வென்றவர் செய்த காரியத்தை பாருங்கள்...

சீனாவில் லாட்டரி மூலம் ரூ. 248 கோடி வென்றவர் கார்ட்டூன் உடை அணிந்து வந்து பரிசுத் தொகையை பெற்றுக் கொண்ட சம்பவம் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

DIN

சீனாவில் லாட்டரி மூலம் ரூ. 248 கோடி வென்றவர் கார்ட்டூன் உடை அணிந்து வந்து பரிசுத் தொகையை பெற்றுக் கொண்ட சம்பவம் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

சீனாவில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் ரூ.1,815-க்கு(இந்திய மதிப்பு) கடந்த அக்டோபர் 20ஆம் தேதி லாட்டரிச் சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அதிர்ஷ்டவசமாக அவரின் லாட்டரிச் சீட்டிற்கு ரூ. 248.48 கோடி(இந்திய மதிப்பு) பரிசுத் தொகை விழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, லாட்டரி நிறுவனத்திற்கு கார்ட்டூன் உடை அணிந்து சென்ற மர்மநபர் தனது பரிசுத் தொகையை பெற்றுக் கொண்டதுடன், ரூ.56 லட்சத்தை சமூக உதவி குழுக்களுக்கு நன்கொடை அளிப்பதாகவும் அறிவித்தார்.

இந்த நிகழ்வில் கார்டூன் உடை அணிந்து வந்தது குறித்து கேட்டதற்கு அவர் கூறிய பதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அவர் கூறியதாவது, “இந்த பரிசுத் தொகை விழுந்தது குறித்து எனது மனைவி மற்றும் குழந்தையிடம் நான் கூறவில்லை. ஏனென்றால், பிறரைவிட உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் அவர்களுக்க் வந்துவிட்டால், எதிர்காலத்தில் கடின உழைப்பை செய்ய மாட்டார்கள் என்று எனக்கு அச்சம் எழுந்துள்ளது.

இந்த பரிசுத் தொகையை எந்தவகையில் செலவிட வேண்டுமென்று இதுவரை முடிவெடுக்கவில்லை. மெதுவாக செலவு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன்” என்றார்.

மேலும், பல ஆண்டுகளாக லாட்டரி வாங்கும் பழக்கமுடைய அவர், 40 முறைக்கு மேல் சிறிய அளவிலான பரிசுத் தொகை வென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழர்கள்..." Vijay பேச்சு!

திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவு உண்மை, நேர்மை முக்கியம்! Vijay குட்டிக் கதை!

"stalin uncle, very wrong uncle" ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய Vijay

தவெக மாநாடு நிறைவு! வெளியேறும் வாகனங்களால் திணறும் மதுரை!

கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக! Vijay பேச்சு

SCROLL FOR NEXT