கமிலோ குவேரா 
உலகம்

புரட்சியாளர் சேகுவேரா மகன் கமிலோ மரணம்

புரட்சியாளர் எர்னெஸ்டோ சேகுவேராவின் மகன் கமிலோ மாரடைப்பால் காலமானார்.

DIN

புரட்சியாளர் எர்னெஸ்டோ சேகுவேராவின் மகன் கமிலோ மாரடைப்பால் காலமானார்.

அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபாவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற  போராடியவர் எர்னெஸ்டோ சேகுவேரா.

பல தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கிய சேகுவேரா இறுதியாக கொரில்லா போரை நடத்தும் பொருட்டு 1967 ஆம் ஆண்டு பொலிவியா நாட்டிற்குள் நுழைந்தவரை பொலிவிய ராணுவத்தினர் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றனர்.

மறைந்த சேகுவேரா - அலெய்டா மார்ச் தம்பதியினருக்கு  4 மகன்கள் இருந்தனர்.

இந்நிலையில், அவர்களுடைய 3-வது மகனான கமிலோ குவேரா(60) கியூபாவில் சேகுவேரா குறித்தான ஆய்வகம் ஒன்றில் இயக்குநராக பணியாற்றி வந்தவர் கடந்த திங்கள்கிழமை வெனிசூலாவிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மறைந்த கமிலோவுக்கு கியூபா நாட்டினர்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT