உலகம்

வெள்ள பாதிப்பு: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதியுதவி

DIN

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால், 7-ல் ஒரு பாகிஸ்தான் நாட்டவர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து தேசிய பேரிடராக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இதுவரை இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவிற்கு  3.30 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,136 பேர் பலியானதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மனிதாபியமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு பேரிடர் கால நிதியுதவியாக 30 மில்லியன் டாலரை(ரூ.238 கோடி) வழங்க உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தான் மக்களுக்கு துணையாக அமெரிக்கா இருக்கும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT