உலகம்

இலங்கை திரும்புகிறார் கோத்தபய ராஜபட்ச?

DIN

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச இந்த வாரம் இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை காரணமாக அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிபர் மாளிகையைக் கைப்பற்றினர்.

இதன் காரணமாக கடந்த ஜூலை 13-ஆம் தேதி கோத்தபய ராஜபட்ச மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றாா். அதனைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கும் தாய்லாந்துக்கும் ராஜபட்ச தப்பிச் சென்றார். 

இந்நிலையில் செப்டம்பர் 3ஆம் தேதி சனிக்கிழமை கோத்தபய ராஜபட்ச இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே இவ்வாறான தகவல் கசிந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் இச்செய்தி அந்நாட்டில் பேசுபொருளாகியுள்ளது. இதற்கான ஏற்பாட்டை தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச நாடு திரும்புவதாக பரவி வரும் செய்தி அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT