உலகம்

அமெரிக்காவில் வணிக வளாகத்தை விமானம் மூலம் தகர்க்க முயற்சி

அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

DIN

அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகாணத்தில் டியுபுலோ வால்மார்ட் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தைத் தகர்க்கப் போவதாகக் கூறி கடத்தப்பட்ட விமானத்திலிருந்து மர்ம நபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடத்தப்பட்ட விமானத்தைக் கொண்டு வணிக வளாகத்தை சுற்றி வட்டமிட்டுவரும் அவருடன் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக வளாகப் பகுதியில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

விமானத்தைக் கடத்திய நபர் யார்? எதற்காக மிரட்டல் விடுக்கிறார்? என்பது குறித்த எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்: மாநகராட்சி ஆணையரிடம் வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

SCROLL FOR NEXT