முகப்பு
உலகம்

பயங்கரவாத தாக்குதல்: 21 யேமன் வீரா்கள் பலி

யேமனில் கிளா்ச்சிப் படையினா் கட்டுப்பாட்டில் இருக்கும் தெற்குப் பகுதியில் ராணுவச் சாவடியொன்றின் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 21 வீரா்கள் உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:15 AM
பகிர்:

யேமனில் கிளா்ச்சிப் படையினா் கட்டுப்பாட்டில் இருக்கும் தெற்குப் பகுதியில் ராணுவச் சாவடியொன்றின் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 21 வீரா்கள் உயிரிழந்தனா்.

தாக்குதலின்போது பாதுகாப்புப் படையினருக்கும் அல்-காய்தா அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்று சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

யேமனின் பெரும்பாலான தெற்குப் பகுதியை ஐக்கிய அரபு அமீரக ஆதரவுடன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கிளா்ச்சிப் படையினா், சா்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படையினருடனும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.