உலகம்

சீனாவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு

சீனாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. 

PTI

சீனாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. 

தென்மேற்கே அமைந்துள்ள சிசுவான் மாகாணத்தில் திங்கள்கிழமை மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. 16 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 6.8 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தின் மையத்துக்கு 5 கி.மீ. தொலைவில் ஏராளமான கிராமங்கள் இருந்தன. பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பாதுகாப்புக் கருதி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிலநடுக்கம் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பல இடங்களில் மின்சார வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 26 பேரைக் காணவில்லை எனவும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன. 

இதற்கிடையே, நிலநடுக்க பாதிப்புக்கு இடையிலும் சிசுவான் மாகாணத் தலைநகா் செங்டுவில் அந்த நகர நிர்வாகம் கடுமையான கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளை தொடர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2008ல் சிச்சுவானில் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 90,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடி - டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை: காங்கிரஸ் விமரிசனம்

டாஸில் 15-0 தோல்வி... இந்திய கேப்டன் கூறியதென்ன?

கிராமங்களில் சிறு, குறு கடைகளுக்கு உரிமம் தேவையில்லை! - தமிழக அரசு

சீன தலைநகரில் கடும் வெள்ளம்: 80,000 பேர் வெளியேற்றம்! இருளில் மூழ்கிய 136 கிராமங்கள்!

அதிக ரிஸ்க், அதிக பலன்... காயம் குறித்து பென் ஸ்டோக்ஸ்!

SCROLL FOR NEXT