உலகம்

இரட்டைக் குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தைகள்: போர்த்துகலில் சுவாரசியம்!

DIN

போர்த்துகலில் ஓர் இளம் பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு அப்பாக்கள், வெவ்வேறு ஆண்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

போர்த்துகலில் உள்ள மினரோஸ் நகரில் மிகவும் அரிதான இந்த சம்பவம் நடந்துள்ளதாக போர்த்துகலின் ஜி1 குளோபோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

19 வயதான அந்த இளம்பெண், ஒரே நாளில் இரண்டு ஆண்களுடன் உடலுறவு கொண்டுள்ளார். பின்னர், கருவுற்றிருந்த அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. 

தன்னுடைய குழந்தைகளுக்கு இவர்தான் தந்தையாக இருக்கும் என ஒரு நபருடன் இருந்துள்ளார். பின்னர், டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு செய்து, தன்னுடைய இரு குழந்தைகளுக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்தார்.

அவற்றில், ஒரு குழந்தையின் டிஎன்ஏ மட்டுமே உடனிருந்தவருடன் ஒத்துப்போனது. அதன் பின்னர்தான், இன்னோர் ஆணுடனும் அதே நாளில் உடலுறவு கொண்டதை நினைவுகூர்ந்த அந்த பெண், இரண்டாம் நபரை அழைத்துள்ளார். 

டி.என்.ஏ. பரிசோதனையில் மற்றொரு குழந்தை அந்த இரண்டாம் நபருக்குப் பிறந்தது தெரியவர அனைவரும் அதிசயப்பட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

ஒரே வயிற்றில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வேறுவேறு அப்பாக்கள் என்பது உலக அறிவியல் வரலாற்றில் அரிதான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. 

இரண்டு குழந்தைகளும் பிறந்து இப்போது சுமார் 16 மாதங்களாகும் நிலையில், 'இவ்வாறு நடக்கும் என்று எனக்குத் தெரியாது, நான் எதிர்பார்க்கவில்லை' என்று அந்த பெண் கூறியுள்ளார். 

மேலும் இரண்டு குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழிலும் ஒருவரது பெயரே தந்தை பெயராகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவரே இரண்டு குழந்தைகளையும் வளர்க்கப் பொறுப்பேற்றுள்ளதாகவும் அந்த பெண் தெரிவித்தார். 

சோதனை மேற்கொண்ட மருத்துவர் இதுகுறித்து, 'இது மிகவும் அரிதானது. அறிவியலில் இதனை ஹெட்டோரோபேட்டர்னல் சூப்பர்ஃபெகண்டேஷன் (heteropaternal superfecundation) என்று கூறுவார்கள். ஒரே மாதவிடாய் சுழற்சிக் காலத்தில் ஒரு பெண்ணின் உடலிலிருந்து இரண்டாவதாக ஒரு கருமுட்டை வெளியாகும்போது இவ்வாறு நிகழலாம். ஆனால், இதே காலகட்டத்தில் அந்தப் பெண் வேறு பலருடனும் உடலுறவு வைத்திருக்க வேண்டும்' என்றார். 

இதுபோல, உலகில் ஒரே பிரசவத்தில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தைகள் இருப்பது இதுவே முதல்முறை அல்ல, இது 20 ஆவது நிகழ்வு. பதிவு செய்யப்பட்ட மருத்துவ வரலாற்றில் ஏற்கெனவே, இவ்வாறு 19 முறை நடந்திருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT