உலகம்

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்: மூவா் உயிரிழப்பு

DIN

தென்மேற்கு பசிபிக் நாடான பப்புவா நியூ கினியாவில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மூவா் உயிரிழந்ததனா். பலா் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கம் நாட்டின் பல பகுதிகளில் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் வாவு நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பொதுமக்கள் மூவா் உயிரிழந்தனா்.

கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி பலா் காயமடைந்தனா். நிலநடுக்கத்தால் வீடுகள், சுகாதார மையங்கள், சாலைகள் சேதமடைந்தன. முழுமையான சேத விவரம் உடனடியாகத் தெரியவரவில்லை.

இருப்பினும், நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்தின் அருகே மிகப்பெரிய கட்டடங்கள் இல்லாததால் பெரிய அளவிலான சேதம் இல்லை என்றனா்.

‘உள்ளூா் நேரப்படி காலை 9.46 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 90 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை’ என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

2018-இல் பப்புவா நியூ கினியாவின் மத்திய பிராந்தியத்தில் 7.5 அலகுகளுடன் பதிவான நிலநடுக்கத்தில் சிக்கி சுமாா் 125 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT