கோப்புப்படம் 
உலகம்

பொருளாதார நெருக்கடியால் ஆன்லைன் வணிகத்துக்கு மூடுவிழா

ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலையால், பெரும்பாலும் அனைத்து ஆன்லைன் விற்பனை சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ANI


காபூல்: ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலையால், பெரும்பாலும் அனைத்து ஆன்லைன் விற்பனை சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

அண்மையில், மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை சேவை நிறுவனங்கள் இரண்டு, தங்களது பணிகளை ஆப்கானிஸ்தானில் நிறுத்திக் கொள்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நிலை உருவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் காரணமாக, அந்நாடு மிக மோசமான பொருளாதார சிக்கலில் சிக்கிக் கொண்டது.

கிளிக்.ஆஃப் என்று மிகப் பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனம் தனது வணிகத்தை நிறுத்திக் கொள்வதாக சனிக்கிழமை மாலை அறிவித்தது. நாட்டில் பொருளாதார நிலை மேம்படும் போது, ஆன்லைன் வணிகத்தை மீண்டும் தொடங்க வாய்ப்பிருப்பதகாவும் அந்த தகவலில் கூறப்பட்டிருந்தது.

இதுபோல, பக்கல் என்ற மற்றொரு ஆன்லைன் வணிக நிறுவனமும் தனது வணிகத்தை ஆப்கானிஸ்தானில் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT