உலகம்

பாகிஸ்தான் வெள்ள பலி 1,500-ஆக உயா்வு

DIN

பாகிஸ்தானில் வழக்கத்தை விட மிக அதிகமாக பெய்து வரும் பருவ மழைக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,500 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பானது இதுவரை இல்லாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மொத்த பரப்பில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில், வெள்ளபாதிப்பால் இதுவரை சுமாா் 1,500 போ் பலியானதாகவும்  12,700 போ் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கனமழை காரணமாக, 17 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. 

முன்னதாக, செவ்வாய்க்கிழமை வெள்ள பாதிப்புகளைப் பார்வையிடச் சென்ற ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் இத்தகைய பாதிப்பை இதுவரை சந்தித்ததில்லை எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT