அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 
உலகம்

உக்ரைனுக்கு ரூ. 4,790 கோடி ராணுவ உதவி: அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைனுக்கு 600 மில்லியன் டாலர்(4,790 கோடி ரூபாய்) ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

DIN

உக்ரைனுக்கு 600 மில்லியன் டாலர்(4,790 கோடி ரூபாய்) ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

நேட்டோவில் உறுப்பினராக உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 6 மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது. 

உக்ரைனின் முக்கியமான பல நகரங்களைக் கைப்பற்றியுள்ள ரஷியா, தொடர் ஏவுகணைத் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. 

இதில், உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் நேரடியாக உதவ முடியாத சூழ்நிலையில், அமெரிக்கா உக்ரைனுக்கு தொடர்ந்து நிதி மற்றும் ராணுவ உதவி செய்து வருகிறது. 

இந்நிலையில், உக்ரைனுக்கு ரூ. 4,790 கோடி (600 மில்லியன் டாலர்) மதிப்பிலான ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

கூடுதல் வெடிமருந்துகள், பீரங்கி குண்டுகள் என ரூ. 4,790 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT