உலகம்

'ரஷியாவை தண்டிக்க வேண்டும்' - ஐ.நா. அவையில் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி உரை

உக்ரைன் மீது போர் தொடுத்ததற்கு ரஷியாவை தண்டிக்க வேண்டும் என்று ஐ.நா. கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கோரியுள்ளார். 

DIN

உக்ரைன் மீது போர் தொடுத்ததற்கு ரஷியாவை தண்டிக்க வேண்டும் என்று ஐ.நா. அவையில் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கோரியுள்ளார். 

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 7 மாதங்களை எட்டியுள்ளது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன. 

இந்நிலையில் புதன்கிழமை ஐக்கிய நாடுகள் அவையில் காணொளியில் பேசிய உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்கு ரஷியாவை சிறப்பு நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்று கோரினார். 

ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது, லட்சக்கணக்கான மக்களை இடம்பெயர வைத்தது, நகரங்களை அழித்தது என உக்ரைனுக்கு எதிராக ஒரு பெரிய குற்றம் நடந்துள்ளது. நாங்கள் நியாயமான தண்டனையை கோருகிறோம். எங்கள் நாட்டு பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர், எங்கள் ஆண்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். எங்கள் நாட்டை அபகரிக்க முயற்சித்ததாக தண்டனையை கோருகிறோம்.

ரஷியாவை தண்டிக்க ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும். மேலும் இந்த போருக்கான விளைவுகளை சரிசெய்ய ரஷியா இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் எங்கள் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்' என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ட்ரோன்களில் இந்தியாவின் உதிரி பாகங்கள்: உக்ரைன் குற்றச்சாட்டு

கொல்லப்பட்ட ஆர்வலரின் உடலை ஒப்படைக்க மறுக்கும் இஸ்ரேல்! 6 நாள்களாக உண்ணாவிரதத்தில் பெண்கள்!

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு: அதி கனமழை, வெள்ளப்பெருக்கில் ராணுவ வீரர்கள் மாயம்!

ஆக. 21 மதுரையில் TVK மாநில மாநாடு: Vijay அறிவிப்பு | செய்திகள் சில வரிகளில் | 05.08.25

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

SCROLL FOR NEXT