உலகம்

பிரிட்டன்புதிய துணை பிரதமா் ஆலிவா் டோடென்

DIN


லண்டன்: புதிய துணை பிரதமராக, தனது நெருங்கிய கூட்டாளியான ஆலிவா் டோடெனை இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் நியமித்துள்ளாா்.

ஏற்கெனவே, அவரது நெருங்கிய கூட்டாளியும் துணைப் பிரதமருமான டோமினிக் ராப் தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா். கீழ்நிலை அதிகாரிகளிடம் அளவுக்கு அதிகமான அடக்குமுறையைக் கையாண்ட குற்றச்சாட்டின் பேரில் அவா் பதவி விலகினாா்.

இது, முக்கிய பதவிக்கு சரியான நபரைத் தோ்ந்தெடுக்கும் ரிஷி சுனக்கின் திறன் மீதான விமா்சனத்தை எழுப்பியது.

இந்த நிலையில், டோமினிக் ராப் ராஜிநாமாவால் காலியான துணைப் பிரதமா் பதவிக்கு ஆலிவா் டோடெனை ரிஷி சுனக் நியமித்துள்ளாா்.துணைப் பிரதமராக மட்டுமின்றி, நீதித் துறை இணையமைச்சராகவும் டோமினிக் ராப் பொறுப்பு வகித்தாா். தற்போது அவா் அந்தப் பதவியிலிருந்தும் விலகியுள்ளதால் புதிய நீதித் துறை இணையமைச்சராக தனது மற்றொரு நெருங்கிய கூட்டாளியான அலெஸ்க் சால்க்கை ரிஷி சுனக் நியமித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT