உலகம்

வெள்ளத்தில் மிதக்கும் பெய்ஜிங்: 33 பேர் பலி, 18 பேர் மாயம்!

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

DIN

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. 18 பேர் காணாமல் போயுள்ளனர். 

பெய்ஜிங்கில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்ததால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

மேற்கில் தொடர்ந்து பெய்த கனமழைக்கு 59 ஆயிரம் வீடுகள் சரிந்து விழுந்துள்ளது. கிட்டத்தட்ட 1,50,000 பேரின் வீடுகள் சேதமடைந்துள்ளன. 15 ஆயிரம் ஹெக்டேர்(37 ஆயிரம் ஏக்கர்) பயிர்நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

100-க்கும் மேற்பட்ட பாலங்கள் சாலைகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சேதத்தின் அளவைக் கருத்தில் கொண்டு, முழு மீட்டெடுப்புக்கு சுமார் 3 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று பெய்ஜிங் துணை மேயர் சியா லின்மாவோ தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மல்லிக காந்தா... ராஷி கண்ணா!

ஜாடையில் மயங்கி... ஐஸ்வர்யா மேனன்!

ஆசையில் தொடங்கி... ருக்மிணி வசந்த்!

வங்கதேசத்தை வீழ்த்துமா ஆப்கானிஸ்தான்? 155 ரன்கள் இலக்கு!

மலபார் ராகம்... ஆன் ஷீத்தல்!

SCROLL FOR NEXT