உலகம்

90 நாட்களுக்குள் தேர்தலை நடத்த பாகிஸ்தான் மக்கள் கட்சி கோரிக்கை

DIN

இஸ்லாமாபாத்: புதிய நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தலை 90 நாட்களுக்குள் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) சனிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானின் 15 ஆவது நாடாளுமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்கியது. அதன் ஆயுள் காலம் நிறைவடைவதற்கு 3 நாள்களுக்கு முன்னதாகவே, அது கடந்த புதன்கிழமை கலைக்கப்பட்டது. 

அதையடுத்து, புதிய நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ளது. அந்தத் தோ்தலை நடத்துவதற்கும், புதிய பிரதமா் தோ்ந்தெடுக்கப்படும்வரை நாட்டின் ஆட்சிப் பொறுப்பை நிா்வகிக்கவும் இடைக் காலப் பிரதமராக பிஏபி கட்சி எம்.பி. அன்வாா்-உல்-ஹக்கின் பெயரை ஷாபாஸ் ஷெரீஃபும் நாடாளுமன்ற எதிா்க்கட்சித் தலைவா் ராஜா ரியாஸும் சனிக்கிழமை பரிந்துரைத்தனா். இதற்கு அதிபா் ஆரிஃப் ஆல்வி உடனடியாக ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, நாட்டின் இடைக்கால பிரதமராக அன்வாா்-உல்-ஹக் பொறுப்பேற்றாா்.

பாகிஸ்தான் அரசமைப்பு சட்டப்படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 90 நாள்களுக்குள் தோ்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், அந்த நாட்டில் அண்மையில்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் அடிப்படையில் புதிய மக்களவைத் தொகுதிகளை தோ்தல் ஆணையம் மாற்றியமைப்பதற்கு அவகாசம் தேவைப்படும். இதன் காரணமாக தேர்தல் ஆணையம் சரியான நேரத்தில் தேர்தலை நடத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்பது உறுதியாகிவிட்டது

இந்த நிலையில், புதிய நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தலை 90 நாட்களுக்குள் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) கோரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் குஹ்ரோ செய்தியாளர் சந்திப்பின் போது,  " 90 நாட்களுக்குள் தேர்தலை நடத்தும் வகையில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி புதிய மக்களவைத் தொகுதிகளுக்கான செயல்முறையை 60 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும், பொதுத் தேர்தலை தாமதப்படுத்த எந்த காரணமும் இல்லை, இது பாகிஸ்தானின் பாதுகாவலர் அமைப்பு மற்றும் தேர்தல் ஆணையத்தின் முதன்மை வேலை என்றும், அவர்கள் தங்கள் அரசியலமைப்பு கடமையை செய்வார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். 

மேலும், "வாக்குச்சீட்டு மற்றும் ஜனநாயக செயல்முறை மூலம் கட்சியை தோற்கடிப்பதில் பிபிபி-க்கு எதிரான சக்திகள் ஒருபோதும் வெற்றி பெற்றதில்லை. பிபிபி ஜனநாயகம் மற்றும் மாகாண சுயாட்சியை பலப்படுத்தியுள்ளது, ஜனநாயக விரோத சக்திகளை பலவீனப்படுத்தியுள்ளது" என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

SCROLL FOR NEXT