உலகம்

அதிகாரிகளை விளாசிய வடகொரிய அதிபர்! ஏன் தெரியுமா?

DIN

வெள்ளத்தால் சுமார் 560 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்ததையடுத்து 'இது பொறுப்பற்ற செயல்' என அதிகாரிகளை கடுமையாக விளாசியுள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன். 

அதிபர் கிம் ஜோங் உன், வடகொரியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள நில மறுசீரமைப்புத் திட்டத்தின் பணிகளை பார்வையிடச் சென்றார். 

கடல் அலையின் சீற்றத்தினால் கடல் நீர், வயல் நிலங்களுக்குள் புகுந்து 270 ஹெக்டேர் நெற்பயிர்கள் உள்பட சுமார் 560 ஹெக்டேர் நிலங்கள் சேதமடைந்தன. 

இதனைப் பார்த்த அதிபர், நாட்டின் பிரதமர் கிம் டோக் ஹுன் மற்றும் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் என்று கூறினார். 

நாட்டின் பொருளாதாரத்தை வீணடித்துவிட்டதாக கடுமையாகச் சாடியுள்ளார். 

சமீபத்திய ஆண்டுகளில் கிம் டோக் ஹுன் அமைச்சரவையின் நிர்வாக, பொருளாதார நிலை மிகவும் சீர்குலைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

வடகொரியாவின் அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த இரண்டே வாரத்தில் தென்மேற்கு பருவமழை..!

கங்கனாவின் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

சென்னையில் வெப்பத்தை தணித்த மழை..!

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

கேஜரிவாலுக்கு சிறப்பு சலுகை: உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த அமித் ஷா

SCROLL FOR NEXT