ஃபுகுஷிமா அணு மின் நிலையம் 
உலகம்

ஃபுகுஷிமா கதிரியக்க நீரை கடலில் வெளியேற்ற தொடங்கியது ஜப்பான்!

பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றும் பணியை ஜப்பான் அரசு தொடங்கியது.

DIN

பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றும் பணியை ஜப்பான் அரசு தொடங்கியது.

கடந்த 2011-ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஃபுகுஷிமா அணு மின் நிலையத்துக்குள் கடல் நீா் புகுந்தது. இதனால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அணு உலைகளை குளிா்விக்கும் இயக்கம் நின்று போனது. அதையடுத்து, அந்த மின் நிலையத்தின் 3 அணு உலைகள் உருகின. அதிலிருந்த கதிரியக்க எரிபொருள்கள் கடலில் கலந்தன.

அதையடுத்து, ஜப்பானிலிருந்து கடல் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

அந்த விபத்துக்குப் பிறகு அணு உலைகளிலிருந்து கதிரியக்க நீா் வெளியேறியது. அதனை பெரிய தொட்டிகளில் அதிகாரிகள் தேக்கி வைத்தனா்.

தற்போது சுத்திகரிக்கப்பட்ட அந்த நீரை கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவு செய்த நிலையில், ஜப்பான் சென்று அந்த நீரை ஆய்வு செய்த ஐ.நா. அணுசக்தி பாதுகாப்பு அமைப்பின் நிபுணா்கள், அதனை கடலில் கலப்பது பாதுகாப்பானதுதான் என்று கூறினா்.

எனினும், ஃபுகுஷிமா அணு உலை நீரை கடலில் கலப்பதற்கு சீனா, தென் கொரியா போன்ற நாடுகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஃபுகுஷிமா அணு உலையில் தேக்கி வைக்கப்பட்ட கதிரியக்க நீரை சுத்திகரிக்கப்பட்டு கடலில் வெளியேற்றும் பணி வியாழக்கிழமை காலை தொடங்கியுள்ளது.

அந்த நீரைக் கடலில் கலந்தால், ஜப்பானின் கடல் உணவுகளுக்கு தடை விதிக்கப்போவதாக சீனா மற்றும் ஹாங்காங் அரசுகள் அறிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT