கோப்புப்படம் 
உலகம்

இரு இந்து தொழிலதிபர்கள் கடத்தல்: 10 கோடி கேட்கும் கொள்ளையர்கள்!

பாகிஸ்தானில் இரு இந்து தொழிலதிபர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில், கொள்ளையர்கள் ரூ.10 கோடி  பிணையத் தொகை கேட்கின்றனர். 

DIN

பாகிஸ்தானில் இரு இந்து தொழிலதிபர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில், கொள்ளையர்கள் ரூ.10 கோடி  பிணையத் தொகை கேட்கின்றனர். 

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் இரு இந்து தொழிலதிபர்கள், கொள்ளையர்களால் கடத்தப்பட்டு, சிறையில் வைத்து சித்திரவதை செய்யப்படும் இரண்டு விடியோக்கள் தொழிலதிபர்களின் குடும்பத்தினருக்கு கிடைத்தது. 

ஒரு விடியோவில், 25 வயதான சாகர் குமார், தான் அடிக்கடி அவர்களால் தாக்கப்படுவதைத் தாங்க முடியாமலும், உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், தன்னை அடிக்க வேண்டாம் என்று கடத்தல்காரர்களிடம் கெஞ்சுகிறார்.

இரண்டாவது வீடியோவில், 65 வயதான ஜெகதீஷ் குமார், பலுசிஸ்தானில் பிணைக் கைதியாக வைக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை கடத்திச் சென்றவர்களிடம் தன்னை அடிக்க வேண்டாம் என்று கெஞ்சுகிறார்.

ஜகதீஷ் குமார் கடந்த 65 நாள்களாக கொள்ளையர்களின் பிடியில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு கடத்தல் சம்பவத்திலும், கொள்ளையர்கள் தொழிலதிபர்களை விடுவிக்க ரூ.10 கோடி  பிணைத் தொகை கேட்கின்றனர்.

இவ்வளவு பெரிய தொகையை செலுத்தும் நிலையில் நாங்கள் இல்லை குடும்பத்தினர் கூறுகின்றனர். மேலும், கடத்தல்காரர்களுடன் தொடர்பு இல்லாததால், இருவரையும் விடுவிப்பதற்கான பிணைத் தொகை குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தானில் பெரும்பாலும் தொழிலதிபர்களை கடத்தி, நீண்ட காலம்  வைத்து இருந்து, பெரும் தொகையை தொகை பெறுவதை வழக்கமாக கொள்ளையர்கள் கொண்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயிலர் - 2 படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு!

இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

தில்லி பயங்கரம்! ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை! இளைய மகனைத் தேடும் போலீஸ்

“தலைவர பக்கத்துல பாக்கதான் வந்துருக்கோம்!” தவெக தொண்டர்கள் பேட்டி! | Madurai | Vijay

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

SCROLL FOR NEXT