முகப்பு
உலகம்

மணிலாவில் தீ விபத்து: 15 பேர் பலி!

மணிலாவில் கியூசான் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியானதாக பிலிப்பின்ஸின் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:10 PM
பகிர்:

மணிலாவில் கியூசான் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியானதாக பிலிப்பின்ஸின் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். 

தலைநகரின் கியூசான் நகரில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வீட்டிலிருந்த 15 பேர் தீயில் கருகி பலியாகினர். மேலும் மூவர் உயிர்த்தப்பினர். 

தீ விபத்தில் பலியானவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வீட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆவார். 

Advertisement

திடீரென தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments