கூகுள் மேப்ஸ் 
உலகம்

கூகுள் மேப்ஸ் முன்னாள் வடிவமைப்பாளர் அதிருப்தி

கூகுள் மேப்ஸ் செயலியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள் குறித்து, அதன் முன்னாள் வடிவமைப்பாளர் எலிசபெத் லராக்கி அதிருப்தி வெளியிட்டிருக்கிறார்.

DIN

கூகுள் மேப்ஸ் செயலியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள் குறித்து, அதன் முன்னாள் வடிவமைப்பாளர் எலிசபெத் லராக்கி அதிருப்தி வெளியிட்டிருக்கிறார்.

அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் கூகுள் மேப்ஸ் செயலியின் வடித்தை, கூகுள் அண்மையில் மாற்றம் செய்திருந்தது. பலரும் இந்த மாற்றத்தை வரவேற்றிருந்தாலும், தேவையற்ற சில அம்சங்கள் இருந்ததை பலரும் கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த மாற்றம் குறித்து கூகுள் மேப்ஸ் முன்னாள் வடிவமைப்பாளர் எலிசபெத் லராக்கி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், கூகுள் மேப்ஸ் செயலியில் இருக்கும் தவறுகள் என அவர் நினைக்கும் அனைத்தையும் மிக விரிவாக அலசியிருக்கிறார்.

கூகுள் மேப்ஸ் தனது செயலியை உருவாக்கும்போது சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அதில் தா இடம்பெற்றிருந்ததாகவும், ஆனால் புதிய வடிவமைப்பு அவருக்கு விரும்பும் வகையில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை நான் விரும்பவில்லை. இது மிகச் சாதாரணமாக உள்ளது. துல்லியமற்ற, புரிந்துகொள்வதில் சிக்கலுடன் உள்ளது. மிகவும் முக்கியமாக, இந்த செயலியை மிக எளிமையாக, நேர்த்தியாக உருவாக்கத் தவறிவிட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

வரைபடத்தின் அதாவது மேப்புக்கு மேல் ஏராளமான தகவல்கள் குவிந்துள்ளன. தற்போது 11க்கும் மேற்பட்ட தகவல்கள் விரிகின்றன. இது கிட்டத்தட்ட ரியல் எஸ்டேட் ஆப் போல உள்ளது. விவரங்கள் குறைவாக இருந்தால்தான் இது பலருக்கும் பயனுள்ளதாக இரக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில், மிக எளிமையாக, நேர்த்தியாக, துல்லியமாக இருக்கும் வகையில் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடி உதிர்தல் பிரச்னையா? முதலில் காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்!

புதிய தொடரில் நாயகியாகும் பவித்ரா அரவிந்த்!

மார்கழி மாதப் பலன்கள்: மீனம்

மார்கழி மாதப் பலன்கள்: கும்பம்

மார்கழி மாதப் பலன்கள்: மகரம்

SCROLL FOR NEXT