கோப்புப் படம். 
உலகம்

காஸா: பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 15,523 ஆக உயர்வு

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 15,523 ஆக உயர்ந்துள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

DIN

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 15,523 ஆக உயர்ந்துள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் கூறியதாவது, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனப் பகுதியில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 41,000-ஐ தாண்டியுள்ளது. காயமடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் மிகக் குறைந்த மருத்துவ வசதிகளுடன் தரையில் சிகிச்சை பெற்று வருவதாக அல்-கித்ரா தெரிவித்தார்.

கடந்த அக்.7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினா் தாக்குதல் நடத்தி, சுமாா் 240 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா். 

இதைத் தொடா்ந்து, காஸா மீது இஸ்ரேல் போா் தொடுத்தது. காஸா மீது இஸ்ரேல் கடுமையாகத் தாக்குதல் மேற்கொண்டு வந்த நிலையில், ஹமாஸிடம் உள்ள பிணைக் கைதிகளையும் இஸ்ரேலிடம் உள்ள பாலஸ்தீன கைதிகளையும் விடுவிக்க வசதியாக, ஒருவார காலம் தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் போா் நிறுத்தத்தின்போது ஹமாஸிடம் இருந்த 105 பிணைக் கைதிகள், இஸ்ரேல் சிறைகளில் இருந்த 240 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா். கடந்த வெள்ளிக்கிழமை போா் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், காஸாவை இஸ்ரேல் மீண்டும் கடுமையாகத் தாக்கி வருகிறது. வடக்கு காஸாவில் தாக்குதலில் ஈடுபட்டு வந்த இஸ்ரேல், தற்போது தெற்கு காஸாவையும் தாக்கத் தொடங்கியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT