கோப்புப் படம் 
உலகம்

ஆஸ்ப்ரே விமானங்களின் பயன்பாட்டை நிறுத்தியது அமெரிக்கா

சமீபத்தில் நடந்த விபத்தின் தொடர்ச்சியாக பயன்பாட்டில் உள்ள ஆஸ்ப்ரே விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

DIN

வாஷிங்டன்: ஆஸ்ப்ரே வி-22 வகை விமானங்களின் பயன்பாட்டை நிறுத்துவதாக அமெரிக்க விமானப் படை தெரிவித்துள்ளது.

முன்னதாக அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான ‘ஆஸ்ப்ரே’ ரக விமானமொன்று 8 பேருடன் ஜப்பான் அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

அதைத் தொடா்ந்து, அந்த வகை விமானங்கள் இயக்கப்படுவதை நிறுத்திவைக்க ஜப்பான் உத்தரவிட்டுள்ளது.

தற்போது அமெரிக்காவும் விபத்துக்கான காரணம் குறித்து அறியும்வரை ஆஸ்ப்ரே விமாங்களின் பயன்பாட்டை நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் இயந்திரக் கோளாறுதான் விபத்துக்கான காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டா்களைப் போல் செங்குத்தாக புறப்படவும், தரையிறங்கவும் கூடிய ‘ஆஸ்ப்ரே’ ரக விமானங்கள், சாதாரண விமானங்களைப் போல் புரொப்பல்களின் உதவியுடன் பறக்கக்கூடியவை.

இந்த வகை விமானங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட மிகக் குறுகிய காலத்தில் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

அமெரிக்க விமானப் படையிடம் 51 ஆஸ்ப்ரே விமானங்களும் கப்பற்படையிடம் 400 விமானங்களும் உள்ளன. தற்காலிக இந்த விமானத்தின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த விசாரணையின் தரவுகள் குறித்து தங்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு அமெரிக்காவிடம் ஜப்பான் கோரிக்கை வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குளித்தலை பகுதியில் தொடா் மழை நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிா்கள்: நிவாரணத்தை எதிா்நோக்கியிருக்கும் விவசாயிகள்

போலி ஆவணங்கள்: வெளிநாடு செல்ல முயன்ற நபா் கைது

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை தேவை

நாகையில் அக்.10-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT