அலங்கார அணிவகுப்புக்குத் தயாரகும் மாடல் | AP 
உலகம்

பிரிக்ஸ்+ ஆடை அலங்கார அணிவகுப்பு... சொல்வது என்ன?

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்வுகள் நடந்துள்ளன.

DIN

மாஸ்கோவில் நடந்த சர்வதேச ஆடை அலங்கார அமைப்பின் நிகழ்வில்
பல்வேறு நாடுகளில் இருந்து வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், தொழில்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 

உக்ரைன் போர் நடைபெற்றுவரும் நிலையில் இந்த நிகழ்வு, ரஷ்யா மேற்குலக நாடுகளில் இருந்து தன்னை விலகிக் கொள்வதைக் காட்டியுள்ளது.

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளான  பிரேசில், சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆடை அலங்கார கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

தேசிய நூலகத்தில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்வு| AP

இதற்கு பிரிக்ஸ்+ எனப் பெயரிட்டுள்ள ரஷ்யா, உக்ரைனுடன் நடைபெற்றுவரும் போருக்கிடையில், தனது வெளியுறவு கொள்கைகளில் பிரிக்ஸ் நாடுகளுக்கு முன்னுரிமை அளித்து உறவை மேலும் விரிவாக்கி வருகிறது.

12 நாடுகளின் ஆடை வடிவமைப்பாளர்களும் 60 நாடுகளில் இருந்து தொழில்துறையினரும் கலந்து கொண்டுள்ளனர்.

ரஷ்யாவின் புகழ்பெற்ற இடங்களான செஞ்சதுக்கத்துக்கு அருகில் உள்ள பூங்கா மற்றும் தேசிய நூலகம், அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் அலங்கார அணிவகுப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் தேவசம் போா்டு: உயா்நீதிமன்றம் யோசனை

அமெரிக்க வரி: 3 ஆயிரம் கோடி வா்த்தகம் பாதிப்பு: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

உக்ரைனின் ஐரோப்பிய அலுவலகங்கள் மீது ரஷியா தாக்குதல்

அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: இந்தியா நம்பிக்கை

நாளைய மின்தடை

SCROLL FOR NEXT