கோரோவர்.ஏஐ (CoRover) நிறுவனம் கூகுள் கிளவுடுடன் (Google cloud) இணைந்து பாரத் - ஜிபிடி (Bharath - GPT) எனும் செய்யறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளனர். உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் இந்த தொழில்நுட்பம் இந்தியர்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 இந்திய மொழிகளில் உரையாடல்களை மேற்கொள்ளக்கூடிய இந்த செய்யறிவு தொழில்நுட்பத்தில் கூகுள் கிளவுட் மிக முக்கிய பங்காற்றுகிறது. இதில் எழுத்து (text), ஒலி (voice) மற்றும் காணொளி (Video) மூலம் உரையாடல்களை மேற்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய கோரோவர் நிறுவனர் அன்குஷ் சபர்வால், 'பாரத் - ஜிபிடி உடனான எங்களது குறிக்கோள் வெறும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு என்பதைத் தாண்டி, நாட்டின் கலாச்சார பாரம்பரியங்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதுதான். கூகுள் கிளவுட் அமைப்பில் உருவாக்கப்படும் இந்த செய்யறிவு தொழில்நுட்பம் நம்பகமான முறைகள் மூலம் தகவல்களைக் கையாளக்கூடியது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சிறப்பு அந்தஸ்து ரத்தை சா்வதேச சட்டம் ஏற்கவில்லை: பாகிஸ்தான்
கூகுள் கிளவுட் இந்தியா (Google Cloud India) - வின் நிர்வாக இயக்குநர் பிக்ரம் சிங் பேடி, கோரோவர் ஏ.ஐ. உடன் இணைந்து இந்தியாவுக்கென ஒரு செய்யறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், உலகிலேயே ஒரு நாட்டுக்கென ஒரு செய்யறிவு தொழில்நுட்பத்தை உருவாக்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்க்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.