உலகம்

சீர்குலையும் மியான்மரின் பொருளாதாரம்: உலக வங்கி

DIN

இந்த நிதியாண்டில்  மியான்மரின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவிகிதம் மட்டுமே இருக்குமென  உலக வங்கி கணித்துள்ளது.

மியான்மரில் ராணுவத்துக்கும், அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான மோதல் நாட்டின் நிலையை மிகவும் மோசமாக்கியுள்ளதாகவும், 5 லட்சத்தும் அதிகமான மக்கள் அவர்களது இருப்பிடத்தை விட்டு  வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மியான்மர் எல்லைப்பகுதியில் அதிகரித்துள்ள தொடர் மோதல்களால்  சீனாவின் வர்த்தக வழிகள் தடைபட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மியான்மரின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்தமாக 25 லட்சம் பேர் அவர்களது இருப்பிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த நிதியாண்டில் ஒரு சதவிகிதம் மட்டுமே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமிருந்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

SCROLL FOR NEXT