தீவிரவாத தாக்குதலால் ஏற்பட்ட இடிபாடிகளை சோதனையிடும் இராணுவ வீரர் | AP 
உலகம்

பாகிஸ்தான் மீது தற்கொலைப் படை தாக்குதல்!

பாகிஸ்தானில் உள்ள இராணுவ தளத்தில் தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

DIN

பாகிஸ்தான் தேரா இஸ்மாயில் கன் மாவட்டத்தில் உள்ள இராணுவத் தளத்தில் தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்தத் தாக்குதலுக்கு தலிபான் அமைப்போடு தொடர்புடைய தேஹ்ரீக் இ ஜிஹாத் பாகிஸ்தான் (Tehreek-e-Jihad Pakistan) என்ற தீவரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அதிகாலை 2.30 மணியளவில் பாகிஸ்தானின் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 27 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணி நடைபெற்று வருவதால் இறந்தவரகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சி துவங்கிய பிறகு அதிகமான தாக்குதல்கள் பாகிஸ்தானில் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டின் முதல்பாதியில் தாக்குதல்களின் எண்ணிக்கை 80% உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க மத்திய வங்கியின் அடுத்த தலைவராக கெவின் வாா்ஷ் - டிரம்ப் பரிந்துரை

31.1.1976: டெலிபோன் பேச்சுகள் ஒட்டுக் கேட்கப்படுகிறதா? - ராஜ்ய சபையில் மந்திரி விளக்கம்

மனிதநேய வார விழா போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

கல்லூரி பேருந்து - வேன் மோதல்: 11 போ் காயம்

திருவள்ளூரில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT