உலகம்

பனிப்புயல்: சீனாவில் பள்ளிகள், நெடுஞ்சாலைகள் மூடல்!

வடக்கு மற்றும் மத்திய சீனாவில் சில பகுதிகளில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக கடுமையான பனிப்புயல் தாக்கியுள்ளது. 

DIN

வடக்கு மற்றும் மத்திய சீனாவில் சில பகுதிகளில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக கடுமையான பனிப்புயல் தாக்கியுள்ளது. 

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதையடுத்து அங்குள்ள பள்ளிகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை இடங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 

பெய்ஜிங் மற்றும் சீனாவின் வடமேற்கு சின்ஜியாங் பகுதியில் அதிகப்படியான பனி மற்றும் காற்று வீசி வருவதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

பெய்ஜிங்கின் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் 5 முதல் 15 செ.மீ(2 முதல் 6 அங்குலங்கள்) வரையும், சில இடங்களில் 20 செ.மீ(8 அங்குலங்கள்) வரை பணி இருக்கக்கூடும். டிச.14 வரை தொடரும் பனிப்புயல் தொடரும் என வானிலை ஆய்வு மைய நிர்வாகம் கணித்துள்ளது. 

மாகாணம் முழுவதும் மொத்தம் 100 நெடுஞ்சாலைகள், பிற சாலைகளும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வட சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளைப் பனிப்புயல் தாக்கியது. அங்கு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

பனிப்பொழிவைத் தொடர்ந்து கடும் குளிர் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் வட சீனா முழுவதும் வெப்பநிலை குறையும் எனக் கணித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

SCROLL FOR NEXT