உலகம்

61 பேருடன் மூழ்கிய படகு!

DIN

லிபியா கடற்கரையில் 86 புலம்பெயர்ந்த மக்களைக் கொண்ட படகு ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 61 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஐநாவின் புலம்பெயர்ந்தவர்களுக்கான சர்வதே அமைப்பு தெரிவித்துள்ளது. 

லிபியாவில் உள்ள ஐநாவின் சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பின் அலுவலகம் தனது எக்ஸ் தளத்தில், அந்தப் படகு கடற்கரை நகரமான சுவாராவிலிருந்து 86 பேருடன் கிளம்பியதை உறுதிப்படுத்தியுள்ளது. 

மத்திய தரைக்கடல் பகுதி உலகின் ஆபத்தான புலம்பெயர்வு வழிகளில் ஒன்றாக தொடர்கிறது என ஐநா தெரிவித்துள்ளது. 

ஒவ்வொரு வருடமும் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள், லிபியாவின் எல்லை வழியாக புலம்பெயர்கின்றனர். அதில் பலர் கடலில் இதுபோன்ற விபத்துக்களைச் சந்திப்பதாகக் கூறப்படுகிறது. 

ஐநாவின் அகதிகளுக்கான உயர் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, மத்திய தரைக்கடல் பகுதியில் மட்டும் 2500-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆண்டு இறந்துள்ளனர் அல்லது தொலைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை உலகின் மற்ற பகுதிகளில் இதைவிட அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நயன்தாராவின் ‘மண்ணாங்கட்டி’ படப்பிடிப்பு நிறைவு!

6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!

ஹிந்துக்களின் மக்கள்தொகை சரிவுக்கு காங்கிரஸ் தான் காரணம்: பாஜக குற்றச்சாட்டு

பாகிஸ்தான் துறைமுகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 7 பேர் பலி!

கொளுத்தும் வெயிலா? பொழியும் மழையா? தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT