34,000 இணையக் கணக்குகள் முடக்கம், 6,300 பேருக்கு தண்டனை: சீனா அதிரடி
பொய்யான தகவல்களை பரப்பிய 34,000 இணையக் கணக்குகளை முடக்கி, 6,300 பேருக்கு சீன அரசு தண்டனை வழங்கியுள்ளது.
சீனாவில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சமூக ஒழுங்கை நிலை நாட்டும் முயற்சியில் பாதுகாப்பு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.
அதனடிப்படையில் இதுவரை வதந்திகளைப் பரப்பிய குற்றத்தின் கீழ் 34,000 இணையக் கணக்குகள் முடக்கப்பட்டு 6,300-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 4,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சீன பொது பாதுகாப்பு அமைச்சக அதிகாரி லி டாங்க் தெரிவித்துள்ளார்.
'இணையத்தில் தவறான தகவல்களைப் பரப்பி சமூக ஒழுங்கை, அமைதியை கெடுக்க முயற்சிக்கும் இணைய கணக்குகளை முடக்கியுள்ளோம். இந்த நடவடிக்கைகள் நல்ல பலனை அளிக்கும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பிரபல ஹாலிவுட் நடிகரை வீடு புகுந்து தாக்கிய பெண் கைது!
கடந்த 2023-ல் இணையவழியாக நடக்கும் வன்முறைகள், குற்றங்கள், இழிவுபடுத்துதல், தனிப்பட்ட விபரங்களை திருடுதல் போன்றவற்றுக்கு எதிராக சீன காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுவரை 110 வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.