முகப்பு
உலகம்

கூகுளின் புதிய தொழில்நுட்பம் 'விடியோ பொயட்' என்ன செய்யும்?

கூகுள் தனது புதிய தொழில்நுட்பமான விடியோ பொயட்டை அறிமுகம் செய்துள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
புகைப்படத்தை காணொலியாக மாற்றிய விடியோபொயட்
பகிர்:

பல புதிய வசதிகளையும், புதிய செய்யறிவு தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்துவதில் மும்மரம் காட்டும் கூகுள், தற்போது விடியோபொயட் (VideoPoet) எனும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. 

இந்தத் தொழில்நுட்பம் எழுத்துக்களில் இருந்து காணொலிகளைத் தயார் செய்யும் (Text-to-video) திறன் கொண்டது. அதாவது, கொடுக்கப்படும் எழுத்து வடிவிலான தகவல்கள் மூலம் தாமாகவே காணொலிகளை உருவாக்கித்தருகிறது. 

எழுத்து மட்டும் இல்லாமல், புகைப்படங்களை காணொலியாக்குதல் (Image-to-video), ஒலியை காணொலியாக்குதல் (Audio-to-video) போன்ற திறன்களையும் கொண்டுள்ளது.    

கூகுள் ரிசர்ச் (Google Research) வெளியிட்ட யூடியூப் காணொளி ஒன்றில், இந்தத் தொழில்நுட்பத்தின் திறன்கள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. ரூக்கீ தி ராக்கூன் (Rookie the Raccoon) என தலைப்பில் குறும்படமாக வெளியிடப்பட்டுள்ளது.

கூகுளின் செய்யறிவு தொழில்நுட்பம் பார்டில் (BARD), குறும்படக் கதை ஒன்றை எழுதச் செய்து, அந்தத் தரவுகளை இந்த விடியோபொயட் தொழில்நுட்பத்திற்கு அளித்து இந்தக் காணொலி உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 

மேலும் மோனலிசா புகைப்படம் ஒன்றினை அளித்து, அதை மோனலிசா கொட்டாவி விடுவதுபோல் காணொலியாகத் தயார் செய்துள்ளனர். குறுகிய அளவிலான காணொலிகளை மட்டுமே உருவாக்கும் திறன்கொண்ட இந்தத் தொழில்நுட்பம் விரைவில் மேம்படுத்தப்படும் எனவும் கூகுள் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →